தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2021: நாக்கில் சனி வாக்கில் கவனம் தேவை
ஏப்ரல் மாதம் தனசு ராசிக்காரர்களுக்கு நாக்கில் சனி தனித்திருப்பதால் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் சிக்கலின்றி கடந்து விடலாம்.
சென்னை: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் உயர்பதவிகள் தேடி வரும். வாக்கு ஸ்தானத்தில் தனித்து சனியிருப்பதால் பேச்சில் கவனம் தேவைப்படும். ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழந்தைகளால் சந்தோஷம் நிறைந்த மாதமாக மாறப்போகிறது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

குருவினால் குதூகலம்
தனுசு ராசி நேயர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம் குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் நீங்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக இருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய விசயங்கள் பலவற்றை கற்றுக்கொள்வீர்கள்.

கோபம் வேண்டாம்
குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிம்மதி தேடி வரும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும் வாக்கு வன்மை அதிகரிக்கும் என்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி தனியாக இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்தவும். வீண் வாக்கு வாதம் விதாண்டா வாதத்தை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் லாபம்
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீரும். முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும்.

உணவு விசயத்தில் கவனம்
திட்டமிட்ட காரியங்கள் சரியான நேரத்தில் நன்மையில் முடிவடையும். பெண்களுக்கு இது அற்புதமான மாதம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் பெண்களுக்கு நிறைய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும் உணவு விசயத்தில் கவனம் தேவை. முன்னோர்கள் வழிபாடு அவசியம் செய்யவும். இந்த மாதம் சிவ ஆலயம் சென்று திங்கட்கிழமை பாலபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications