தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

dhanusu-june-month-rasi-palan-what-kind-of-benefits-will-dhanusu-rasi-people-get-during-june-2026

இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.

தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இதுவரைக்கும் 7 ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தார் குரு பகவான். தற்போது 8 ஆம் இடத்திற்கு குரு பகவான் மாறவுள்ளார். 8 இல் மறையும் குருவால் அச்சப்படத் தேவையில்லை. ராசிநாதன் 8 ஆம் இடத்திற்கு மாறுவது உங்களுக்கு கெளரவம், அந்தஸ்தை ஏற்படுத்தும். குரு பகவான் 2, 4, 12 ஆம் இடத்தையும் பார்ப்பதால் நல்ல பொருள் வரவு ஏற்படும்.

வீடு கட்டும் யோகம்

அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீடு கட்டுவது, வீடு வாங்குவது, வீட்டிற்குத் தேவையான நற்பொருள்கள் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். 5 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய் 6 ஆம் இடத்திற்கு வருவார். இதன் மூலம் குழந்தைகள் விஷயத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். 6 ஆம் இடத்திற்கு ஜூன் மாதம் 20 ஆம் தேதிக்குப் பிறகு மாறுவதால் பெரிய பாதுகாப்பு ஏற்படும்.

பிரச்சனைகள் நீங்கும்

3, 6, 10, 11 ஆம் இடத்தில் பாவக் கிரகங்கள் அமருவதால் பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். என்னவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அவை பரிபூரணமாக நீங்கும். ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து நல்ல மாற்றங்கள் தரக்கூடிய அமைப்பு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நல்ல காலகட்டம். கடன், நோய்கள் தீரும்.

குடும்பம்

7 ஆம் இடத்தில் புதன் பகவான் இருப்பதால் கணவன், மனைவி உறவு, காதலன், காதலி உறவு நன்றாக இருக்கும். உங்களுக்கான காதலன், காதலி, கணவன், மனைவி யார் என்பதை அறிந்து கொள்ளும் காலகட்டமாக இருக்கும். வாழ்க்கைத் துணையை அறிமுகப்படுத்தக்கூடிய அமைப்பு உள்ளது. முதல் திருமணத்தில் பாதிப்புகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் மாறி கணவன், மனைவி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும்.

பணவரவு

நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள் கூட சுமூகமாகப் பேசி தங்களுக்குள் சமரசம் செய்து கொள்வீர்கள். குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்கலாம் என்கிற மனமாற்றம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் தொழில் ஸ்தாதிபதி இருப்பது அற்புதமான காலகட்டம். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள், கையிருப்பு பணம் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல காலகட்டம். மாற்றம், முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+