ஜூலை 6 முதல் 12 இல் தனுசு ராசிக்கு வரப்போகும் முக்கியமான குட் நியூஸ்.. இந்த வார முழு பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-dhanusu-rasi-people-will-get-lots-of-good-news-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி தனுசு லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம். பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தில் இருக்கின்றீர்கள். வேலைகளும், உங்கள் நிலைமைகளும் மாறும். கால், அடிவயிறு, கழிவுகள் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன், கேது பாக்கிய ஸ்தானத்தில் சேருவது பெண்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

யோக பலன்

யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மற்றவர்கள் அவர்களைப் பற்றி என்ன பேசினாலும் அவர்களை ஏலனப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்பம், உங்களுடைய காதல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பேச்சிற்கும் செவி சாய்க்காமல் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வது நல்லது.

உடற்பயிற்சி அவசியம்

அர்த்தாஷ்டம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் நல்ல காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

குட்நியூஸ்

4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் சனியால் சொந்த பந்தங்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். இந்த வாரத்தைப் பொருத்தவரை நிறைய பேருக்கு பழைய நண்பர்கள், நட்பு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாக முக்கியமான ஆஃபர்கள், ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

அனுகூலம்

தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். சிவன் வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். இந்திராட்சி கவசம் படிப்பது அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கஜலட்சுமி வழிபாடு நல்ல மாற்றங்களைத் தரும். சிறுநீரகத் தொற்று, மலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+