Dhanusu Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. பொற்காலம் ஆரம்பமாகப் போகுது
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே யோகாதிபதி, பாக்கியாதிபதியாக சூரியன் 10 ஆம் இடத்தில் வலிமையாக வந்து உட்கார்ந்திருக்கும் நேரத்தில் புராட்டாசி மாதம் பிறந்துள்ளதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அமோகமாக இருக்கும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
திடீர் பண வரவு
எங்கே சென்றாலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். புதன் உச்சம் பெற்று இருப்பதால் திடீர் பண வரவு உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தந்தையின் ஆசிர்வாதம் கிடைக்கும். அவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற்று காட்டும் யோகம் உண்டு.
திருமண யோகம்
உங்க ராசிக்கு ஆதரவாக சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க பயணம் செய்வதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு மீண்டும் திருமணப் பேச்சுவார்த்தை நடத்தும் யோகம் உண்டாகும். மகனுக்கு திருமணம் பார்ப்பவர்களுக்கு நல்ல பொருத்தமான மணமகள் கிடைக்கும் ஜாதகம் அமையும் வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் உங்களுக்கு ஆதரவாக லாப ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும்.
சொத்துகள் அமையும் வாய்ப்பு
பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. புதிய சொத்துகள் அமையும் வாய்ப்புள்ளது. வியாபாரம் இந்த மாதம் முழுக்க அமோகமாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட லாபம் நன்றாக இருக்கும். புதிய ஏஜென்ஸி எடுக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோக வகையில் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோக ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
வழிபாடு
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் வழுத்து அமர்ந்திருப்பதால் விலை உயர்ந்த தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. இந்த புரட்டாசி மாதம் நிம்மதியைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் முருகப் பெருமானை வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றங்களையும், மாற்றங்களையும் உண்டாக்கித் தரும். வாய் பேச முடியாதவர்களுக்கு உதவுவது, உலர் திராட்சை தானமாகக் கொடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications