Rasi Palan This Week: தனுசு ராசிக்கு யோகமான வாரம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

Dhanusu Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefit-will-get-dhanusu-rasi-people-from-april-27th-to-march-3

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நன்மை பயக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

அனுகூலம்

எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உறவுகளுக்குள் மேன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வது, அம்மாவின் வீட்டிற்கு செல்வது என பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும்.

முன்னேற்றம்

கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி அந்நியோன்யம் கூடும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அடுத்தடுத்து முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பெரியளவுக்கு சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பாக்கியத்தில் சந்திரன் இருப்பதால் வயிறு, உஷ்ணம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

கவனம்

சிறிய சிறிய மனக் கலங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய விஷயங்களை செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களை எடுத்து செய்வதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீத நன்மையும், பொருளாதார ரீதியாக 80 சதவீதமும் முன்னேற்றம் ஏற்படும்.

வழிபாடு

ஐயப்ப சுவாமியை வழிபாடு செய்வது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அம்பாள் வழிபாடு, தேவி வழிபாடு செய்வது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். துர்க்கை கவசம் கேட்பது மேன்மையைத் தரும். வயிறு, கழுத்து, முதுகுத்தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+