Rasi Palan This Week: தனுசு ராசிக்கு குரு பார்வையால் வரப்போகும் அதிர்ஷ்டம்.. பணம் தான் பிரச்சனையே
Dhanusu Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. அந்த வகையில், மே 5 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் உத்தியோகம், தொழில், வியாபாரம், சுற்றுலாவிற்குச் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேருவீர்கள். துணைக்கு கெளரவம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும்.
சிக்கல் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான ஏற்றங்கள் காணப்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறும் காலகட்டம். பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகளின் விஷயத்தில் சிறு சிறு சறுக்கல்கள் காணப்பட்டாலும் விரையில் அந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
தானம்
வயிறு தொடர்பான பிரச்சனைகள், ஜீரணம் தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். சூரியன் உச்சமாகி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது எல்ல விதமான பிரச்சனையையும் போக்கும்.
குரு பார்வை
பெற்றோர், பெரியோருடன் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். பலவிதத்தில் நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். நல்ல காலகட்டம். குருவின் பார்வை பலத்தில் இருப்பதால் இந்த மாதம் முழுவதும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். மூத்த பெண்களால் பாதிப்புகள் வந்தாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும். பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
வழிபாடு
பணம் தொடர்பான நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கோபப்படாமல் பொறுமையாக செயல்படுவது நல்ல பலன்களைத் தரும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் தள்ளிப்போய் நடக்கும். திருப்பரங்குன்றம் முருகப் பெருமானம் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications