Dhanusu rasi palan: அடித்தாடும் தனுசு ராசி.. அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. என்ஜாய்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய வாரமாக இந்த வாரம் உங்களுக்கு இருக்கும். பெற்றோர், பெரியவர்களுடன் கோபப்படாமல் இருப்பது நல்லது. உறவுகள் விஷயத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் உள்ளூர், வெளியூர் சென்று வரக்கூடிய யோகம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள், பண விஷயங்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.
அடுத்தடுத்து முன்னேற்றம்
அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் அனைத்தும் நீங்கும். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொட்ட விஷயங்கள் அனைத்தும் துலங்கும். உள்ளூர், வெளியூர் என எந்தப் பயணங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. தொழில் மாற்றம், வீடு மாற்றம், வியாபார மாற்றம், வேலை மாற்றம் என எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். யோகங்கள் உண்டாகும்.
கஷ்டங்கள் நீங்கும்
பழைய நண்பர்கள், உறவினர்களுடன் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். மீண்டும் பழையபடி பேசி சந்தோஷமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையை ஏற்படுத்தும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications