Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புதிய நபர்களிடம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்திலும், சமுதாயத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுடைய பெயருக்கு, பணவரவுக்கு இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். பதவி உயர்வு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் அபிவிருத்தி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் யோகம் உண்டு.
புரோமோஷன்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கட்டாயமாகக் கிடைக்கும். நீட் போன்ற தேர்வுகளை நன்றாக எழுதிய முடிப்பீர்கள். இளம் வயது சார்ந்தவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கூடா நடப்பு கேடு விளைவிக்கும் என்பதால் கவனம் தேவை, பயணங்கள் சமயத்தில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
அனுகூலம்
அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். உடற்பயிற்சி செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் வரும் பாதிப்புகள் தடுக்கப்படும். உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் யாரிடமாவது சண்டை போடலாமா என்கிற எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். வியர்வை வரும் வகையில், உடற்பயிற்சி செய்லது நல்ல பலனைத் தரும்.
கவனம்
வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடது பக்கத்தில், இதயத்தில் பாதிப்புகள் இருக்கக் கூடியவர்கள் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். தாய் வழி, தந்தை வழி உறவுகளுடன் மனதிற்குப் பிடித்த விஷயங்களை மனதார பேசுவது நன்மை பயக்கும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ராகவேந்திரர், பாபா, ரமண மகரிஷி என மகான்களை வழிபாடு செய்வதை நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications