Rasi Palan This Week: அம்மாடியோவ் தனுசு ராசிக்கு பண மழை – வேற லெவல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசி மற்றும் தனுசு லக்னத்தினருக்கு இந்த வாரம் நல்ல பலன்களை கொடுக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராதளவுக்கு லாபம் கிடைக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். இவ்வளவு பணத்தை எப்படி வீட்டில் வைப்பது என்று வங்கி லாக்கரில் வைக்குமளவுக்கு கூரையை பிய்த்துக் கொண்டு பணம் வரும். பொருளாதாரம் பெரியவுக்கு உயரும்.
அதிர்ஷ்டங்கள்
சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வீடு, தங்கம், வெள்ளி நகைகள், வண்டி, வாகனம் போன்ற அசையும், அசையா பொருட்களின் சொத்து சேர்க்கை உண்டு. பலர் புதிய முதலீடுகளில் ஈடுபடுவார்கள். மனதில் நினைத்த நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். திடீர் அதிர்ஷ்டங்களால் திக்கு முக்காடுவீர்கள். வாக்கு ஸ்தானம் பலமடைவதால் உங்கள் வார்த்தைக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உயரும்.
தெளிவு
குடும்பத்தில் நிலவி வந்த சிக்கல்கள் எல்லாம் தீரப்போகிறது. உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். மனதில் தெளிவு பிறக்கும். உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை செயல்படுத்த இது சரியான வாரம்.
கவனம்
கைக்கால் வலி, கழுத்து சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோபத்தை குறைத்து பொறுமையாக செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களை காயப்படுத்தும் வகையில் பேசிவிட வேண்டாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பசு மாடுக்கு தானம் செய்வது, மகாலட்சுமி வழிபாடு செய்வது மனக்குறைகளை நீக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications