Rasi Palan This Week: அந்த ஒரு விஷயத்தை கடந்திருங்க.. தனுசுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். படபடப்புகள் காணப்படும். சாப்பிடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாத்திரை, மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்திக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
தடைகள் நீங்கும்
சுப காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும். குலதெய்வத்தை மானசீகமாக பிரார்த்தனை செய்ய செய்ய அற்புதமான விஷயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக் கூடிய அனுகூலம் காணப்படும். பெரிய அளவு செலவுகள் வந்தாலும் அது சந்தோமான செலவுகளாக இருக்கும்.
பதவி, சம்பள உயர்வு
புதன்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது, பசு நெய் தானமாகக் கொடுப்பது பெரிய அளவில் நன்மைகளை உண்டாக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம், பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
அனுகூலம்
நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் குறையும். நட்பில், உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மீண்டும் ஒன்றுசேரும் அமைப்பு உண்டாகும். மறப்போம் மன்னிப்போம் என்கிற வகையில் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் நன்மைகள் காணப்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications