Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அள்ளி கொடுக்கும் புதன் பகவான்.. காசு பணம் துட்டுனு ஒரே குஷிதான்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயத்திலும் ஏற்றமும், அனுகூலமும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், வியாபாரத்தில் தர்க்கம், வீண் வாக்குவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். லாபமும், அனுகூலமும், சுபவிரயமும் ஏற்படும். பெரிய மனிதர்களைச் சந்திக்கக் கூடிய பாக்கியம் ஏற்படும்ய
செல்வாக்கு கூடும்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோகங்களை அதீதமாகப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தலைவலி, ஹார்மோன், ஒற்றை தலைவலி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தூக்கமின்மை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. விநாயகர், நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.
மிகுந்த கவனம்
உங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, அரசு வேலைகள் வாங்குவது போன்றவற்றுக்காக பணத்தைக் கொடுத்து சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அரசியல்வாதிகள், டாக்டர்ஸ், அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். நீதிபதிகள், காவல் துறையினர் கவனமாக இருக்க வேண்டும்.
கடன் தீரும்
6 ஆம் இடத்துக்கு புதன், சுக்கிரன் பார்வை இருப்பது கடனைத் தீர்க்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். நேர்மையாக இருந்தால் எதிர்த்து நின்று ஜெயிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அனுமன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications