Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் தனுசு ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் காலம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-that-dhanusu-sagittarius-will-get-from-december-8-to-14

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசியினருக்கு சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும். இதுவரை இருந்து வந்த மன தாங்கல்கள், பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தொழில், உத்தியோகத்தில் அபிவிருத்தி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் பாக்கியம் ஏற்படும். பண வரவுக்கான உத்தரவாதம் கிடைக்கும்.

துணையின் நீண்ட காலப் பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடைபெறக்கூடிய அமைப்புள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த, தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் இனி அடுத்தடுத்து நடக்கும்.

செல்வாக்கு கூடும்

தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் எடுக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரிய நம்பிக்கையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் துணை விஷயத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். செய்யாமல் இருந்து வந்த தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். உறவுகளால் யோக பலன்கள் கிடைக்கும்.

உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ரத்த பந்த உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள், படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை போன்ற அனைத்து தடைகளும் தவிடுபொடியாகும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தொழிலில் முன்னேற்றம்

தொழில் ரீதியாக அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். துணை விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பெரிய வாய்ப்புகளை தேடிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ராசி லக்கினத்தில் செவ்வாய் பலமாக குரு வீட்டில் அமர்ந்திருக்கிறார். சங்கம், கிளப், அமைப்புகளில், சமூகம், சட்டமன்றம் போன்ற விஷயங்கள் தெரியவரும். பொறுப்புகள் தேடி வரும்.

கெளரவப் பதவிகள் தேடி வரும். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு உதவி செய்யும். 7 ஆம் இடத்தில் இருக்கும் குரு புதன் வீட்டில் அமர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். திருமணம் யோகம் உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். இன்பச் சுற்றுலா, ஆடம்பரச் சுற்றுலா, டிரெக்கிங் செல்வது போன்ற யோகம் உண்டாகும்.

ஆரோக்கியம்

சனி பகவானால் வீட்டில் பிரச்சனை, அம்மா ஆரோக்கியத்தில் பிரச்சனை, இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்கு ஏழைகளுக்கு எலுமிச்சை சாறு வழங்குவது அனுகூலத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+