Rasi Palan This Week: தனுசு ராசிக்கு இந்த வாரத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கோபம் வேண்டவே வேண்டாம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு (Dhanusu Rasi Palan)
தனுசு ராசிக்காரர்களுக்கு மரண பயம் நீங்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடைத் தவிர்க்க வேண்டும். தொலைதூரப் பயணங்கள், உல்லாச பயணங்கள், தெய்வ மார்க்க பயணங்களை குடும்பத்தினருடன் மேற்கொள்வீர்கள்.
முன்னேற்றம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். குடும்பத்தில், வெளியிடத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள், நகைகள் என அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். உள்ளூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
ஓய்வு கிடைக்கும்
மனதிற்குப் பிடித்த மனிதர்களை சந்திப்பீர்கள். ஓய்வுக்கு உங்களுடைய மனம் ஏங்கிக் கொண்டிருக்கும். இப்போது அந்த ஓய்வு உங்களுக்கு கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கோபம் உங்களுடைய எதிரி என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.
வன்மத்தால் பாதிப்பு
தேவையில்லாத வன்மம், சூழ்ச்சியால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. புதிய வேலை, புதிய உத்தியோகத்துக்கு நேர்காணலை அட்டண்ட் செய்வீர்கள். மனதில் சந்தோஷம் ஏற்படும். அசாத்தியமான தைரியம் ஏற்படும். இருப்பினும் சிறு சிறு தடைகள் வந்து சேரும். ஆக்ரோஷம், கோபம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாடு, கோயில் போன்ற பயணங்களின் அந்த ஸ்தலங்களில் குளிக்காமல் இருப்பது நல்லது.
வழிபாடு
காலேஜ், கோர்ட், நீதிபதியை சந்திப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கண், தலைவலி, கழுத்து முதல் தலை வரையுள்ள பாகங்களில் வரும் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் புதனுக்கு தீபமேற்றி வழிபாடு செய்வது குடும்பம், தொழில், உத்தியோகம், வேலை, வியாபாரத்தில் என எல்லா விஷயத்திலும் ஜெயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications