Dhanusu Rasi Palan: சனி, குருவின் அருளால் ஏற்றம் பெறும் தனுசு ராசி.. ஒரு விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு அர்த்தார்ஷ்டம சனி நடக்கிறது. 4 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் குருவின் வீட்டில் இருப்பதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் இருக்கும் வீட்டில் வாஸ்து கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிறு பரிகாரங்கள் செய்து அதனைப் போக்கிக் கொள்வது நல்லது.
இரட்டிப்பு வருமானம்
அம்மாவின் உடல்நலனில் தனுசு ராசியினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு அம்மாவுடைய கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் லாபாதிபதி, பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி ஆகியோர் ஒன்று சேர்ந்து தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றனர். பூர்வீகச் சொத்தினால் வருமானம் ஏற்படும். பூர்வ புண்ணியத்தால் வருமானம், செய்தொழிலால் வருமானம் ஏற்படும். நல்ல வருமானங்கள் வரக்கூடிய மாதமாக இந்த பிப்ரவரி மாதம் இருக்கும்.
வேலைவாய்ப்பு
வாழ்க்கைத் துணையால் கூடுதல் வருமானம் வரும். திருமணம், காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. உங்களுடைய பேச்சில் எப்போதும் டென்ஷன் இருக்கும். உடல்நல பாதிப்பாலும் டென்ஷனாக இருப்பீர்கள். தொழில், வியாபாரம் மூலமாக நல்ல வருமானம் வரும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் கைகூடி வரும். வடபழனி முருகனை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
பரிகாரம்
தனுசு ராசியில் பொதுவாக 3 கர்ம நட்சத்திரங்கள் இருப்பதால் எப்போது தர்ம கர்ம காரியங்களைச் செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இடம், நிலம், வீடு, தோட்டம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். இரட்டிப்பு லாபங்கள் பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications