Dhanusu: சொல்லி அடிக்கும் தனுசு ராசி.. சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-karthigai-month

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணம் ஏற்றத்தை தரும். சுப விரயங்களைச் செய்வீர்கள். பெற்றோர், பெரியவர்களுக்கும், உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். லாபங்கள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு அனுகூலம் ஏற்படும்.

முதலீடு

துணையுடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் போகாத கோவில்களுக்கு எல்லாம் சென்று வரும் யோகம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. வேற்று மொழி மனிதர்களால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். கோயில் கட்டுவது, கோயில்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி கொடுப்பது போன்றவற்றைச் செய்வீர்கள்.

ஆரோக்கியம்

அபிஷேக, ஆராதனைகளை செய்வீர்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு கோதுமை மாவு, வெல்லம் போன்றவற்றை தானமாக அளிப்பது நன்மையை ஏற்படுத்தி தரும். ரத்த அழுத்தம், தைராய்டு, ஹார்மோன் குறைபாடுகளில் அதீத கவனம் தேவை. இதயத்தில் பிரச்சனை இருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.

தடைகள் நீங்கும்

ஆரோக்கியத்தை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சுப விரயங்களைச் செய்வீர்கள். கணக்கு வழக்கு இல்லாமல் செலவுகள் காணப்பட்டாலும், கிரெடிட் கார்டு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

வழிபாடு

சிவாலயங்களில் வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சிவனுக்கு எலுமிச்சை கொடுப்பது பெரிய அளவுக்கு மன அழுத்தங்கள் தீரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு நன்றாக இருக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் சாப்பாடு தானமாகக் கொடுப்பது பண விரயம், அஷ்ட லட்சுமி விரயம் எல்லாம் மாறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+