குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு (Dhanusu Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-maasi-month

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 3 ஆம் இடம் என்பது உபஜெய ஸ்தானம். ஆற்றலைக் காட்டக்கூடிய ஸ்தானம். ஒரு எண்ணம் உங்களுக்கு செயலாக மாற வேண்டும் என்றால் அதற்கு 3ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும். நட்பு வட்டாரங்கள், மாமனார், தோல் பட்டை, எண்ணங்களுக்கு திறன் கிடைப்பது, இலக்குகளுக்கு வழி கிடைப்பது போன்றவை தான் மூன்றாம் இடம்.

குரு பார்வை

அண்ணன், தம்பிக்குள் இருக்கும் பிரச்சனை சரியாகும். நட்புகளின் துணை கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்களுக்கான பதில்கள் வந்து சேரும். நேர்காணல்களுக்கு ஆஃபர் லெட்டர்கள் வந்து சேரும். நிறைய ஆஃபர்கள் வருவதால் எதை எடுக்கலாம் என்று தெரியாமல் குழம்புவீர்கள். குரு வக்கிரமாக அமர்ந்து கொண்டிருப்பதால் எப்படியாவது உங்களை வலைத்துப் போடலாம் என்று தான் நினைப்பார்கள்.

பதவி தேடி வரும்

அற்புதமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். நம்பிக்கை அபரிமிதமானதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் விடக் கூடாது என்கிற எண்ணத்தில் இருப்பீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பதவி தேடி வரும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான யோகங்கள் உண்டாகும். பிஸியாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

பிரச்சனைகள் தீரும்

பெரிய விஷயங்கள் எல்லாம் ஈஸியாக நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லாமே சாதகமாக நடக்கும். பெரிய பிரச்சனைகள் எல்லாம் முடியக்கூடிய காலகட்டம். நிறைய நபர்கள் நண்பர்களாக கிடைக்கக்கூடிய நேரம். பெரிய பெரிய பொறுப்புகள் இருப்பவர்கள் எல்லாம் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். உங்களுடைய இலக்கு, எண்ணம் எல்லாமே நிறைவேறும்.

வழிபாடு

தனுசுக்கு பொற்காலமாக இருக்கும். குருவுடைய பார்வை பலத்தில் பிரகாசமாக இருப்பீர்கள். குறிப்பாக, தனுசு ராசி பெண்களுக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. நட்பு வட்டாரங்கள் விரிவடையும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் சரிசமமாக அற்புதமாக இருக்கும். முருகர் வழிபாடு அபரிமிதமான அனுகூலத்தையும், நன்மையையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+