Dhanusu: தனுசு ராசிக்கு பிரச்சனைகளில் இருந்து விடுதலை.. குருவின் அருளால் கொட்டும் யோகம்
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

தனுசு
தனுசு ராசியினருக்கு நல்ல முன்னேற்றங்களும், எதிர்ப்புகளும் நிறைந்த மாதமாக இருக்கும். மே 1 ஆம் தேதியில் இருந்து 4 ஆம் இடத்தில் நீசமாக இருக்கும் புதன் 5ஆம் இடத்திற்கு செல்கிறார். வேலை, தொழில் நன்றாக இல்லை. வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்திருக்கும். புதன் நீசமாக இருந்ததால் எல்லா விஷயங்களிலும் சாதகமில்லாத அமைப்புகள் இருந்திருக்கும். மே 1 ஆம் தேதியில் இருந்து தொழில், வேலையில் நிம்மதி ஏற்படும்.
கடன் அமைப்பு
11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியின் மூலமாக 5 ஆம் இடத்திற்கு செவ்வாய் வருகிறார். 5 இல் செவ்வாய், 6 இல் சுக்கிரன், 7 இல் குரு இருந்து உங்கள் ராசியைப் பார்க்கும் யோகமான மாதமாக இருக்கும். சிலருக்கு எதிர்ப்புகள் இருக்கும். இன்னும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஏற்கனவே இருந்து வந்த கடன் அமைப்புகள் மீண்டும் எழும். இருப்பினும் அந்த கடன் அமைப்புகளை சமாளிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
வருமானக் குறைபாடுகள் எதுவும் இருக்காது என்பதால் கடன் பிரச்சனைகளை சமாளிக்கும் யோகம் உண்டாகும். நல்ல வேலைக்காரர்கள், உதவியாளர்கள் அமையும் யோகம் உண்டு. தொழில் முன்னேற்றத்தை அடையும் அமைப்பு உள்ளது. 5, 6 ஆம் இடத்தில் சூரியன் இயக்கம் உள்ளதால் அரசு வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகள் செய்பவர்களுக்கு அதற்கான அறிமுகங்கள், வேலை கிடைக்கும் ஆயத்தம், ஆரம்பங்கள் கண்டிப்பாக ஏற்படும்.
குரு உச்சம்
அரசாங்க அனுமதிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான அறிமுகம் கிடைக்கும். ஜூன் 2 ஆம் தேதி ராசிநாதன் 8 ஆம் இடத்திற்கு மாறி குருப்பெயர்ச்சியில் உச்சம் என்ற நிலையை அடையப் போகிறார். அதனால், நீங்கள் உயர்வான இடத்திற்குச் செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான அனுமதிகள் கிடைக்கும்.
பதவி உயர்வு
முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் மற்றும் உற்சாகம் தரும் மாதமாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி உறுதி. இந்த மாதம் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் பெருகக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications