Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu rasi palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பாக்கியாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுவதும் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தாய், தந்தையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த கவலைகள் பரிபூரணமாக நீங்கும். அவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தூரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தாய், தந்தையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையப்படக் கூடிய அருமையான மாதமாக இருக்கும்.
குரு பார்வை
ராசிநாதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உத்வேகம், புத்துணர்ச்சி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. எந்த காரியங்களை எப்படி செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை உணர்ச்சிவசப்படாமல் எல்லா விஷயங்களையும் நடுநிலைமையோடு நின்று சாதிக்கும் யோகம் உண்டு. நல்ல அனுகூலமான அமைப்புள்ளது.
நம்பிக்கை
5 ஆம் இடத்தில் மாதத்தின் இறுதிப் பகுதியில் சுக்கிரன் வலிமையாக இருப்பதால் குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் முதல் 20 நாட்கள் ஒருமாதிரியான அமைப்பு இருந்தாலும், பிற்பகுதியில் அவர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகள் முழுதாக கைகொடுக்கும். பெரிய நம்பிக்கை ஏற்படும். பொருளாதார கஷ்டங்கள் பெரியளவில் இருக்காது.
வருமானம் பெருகும்
வருமானம் நன்றாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் எந்தவித தடையும் ஏற்படாது. எதையும் சமாளிக்க முடியும் என்கிற நிலைமை உண்டாகும். சிறிய சிறிய விஷயங்களில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெரிய குறைகள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு பெரிய விடுதலை உணர்வு உண்டாகும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த மன சங்கடங்கள் எல்லாம் பங்குனி 15 ஆம் தேதிக்குப் பிறகு விலகும்.
முன்னேற்றம்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். மேலதிகாரிகள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள். உங்கள் திறமைகளை அப்படியே வெளிப்படுத்தக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். ஆண், பெண் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தனுசு ராசியினருக்கும் ஏற்றம் நிறைந்த மாதமாக இந்த பங்குனி மாதம் அமைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications