Rasi Palan This Week: கோடியில் புரளும் தனுசு ராசி.. பண மழையில் நீச்சலடிக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

Viruchigam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-week

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தன பாக்கியம் நன்றாக இருக்கும். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செழிப்பாக இருப்பீர்கள். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பேச்சுத் திறமை நன்றாக இருக்கும். இரண்டு பற்களை சரி செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

சந்தோஷம்

ஒரு சிலருக்கு தோள்பட்டை வலி, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் காணப்படும். மண வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். எதற்காகவும், யாருக்காகவும் கவலைப்படாமல் திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு சண்டை பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்

உங்கள் பேச்சை பிடித்துக் கொண்டு டார்ச்சர் செய்யக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தனுசு ராசியினருக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். குடும்பத்தில் அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவது, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அர்த்தாஷ்டம சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்வது தனுசு ராசியினருக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுக்கும்.

வழிபாடு

வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தை விட்டுவிடாமல் இருப்பது நன்மை பயக்கும். லாபமும், அனுகூலமும், சந்தோஷமும் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மிகப்பெரிய கெளரவம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு அனுகூலத்தை தரும். கோயில்களில் கைங்கரியங்களில் ஈடுபடுவது நல்லது.ஏரிகாத்த ராமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+