Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் நேரம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏற்றம், அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். அற்புதமான அமைப்பு உள்ளது. புதன் வழிபாடு, கேது வழிபாடு மேன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மைகளைப் பெற்றுத் தரும். பதட்டம், பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனைத் தவிர்ப்பது நல்லது.
பதவி உயர்வு
ஊர்களுக்குச் செல்வது, உறவினர்களை சந்திப்பது, நண்பர்களை சந்திப்பது போன்ற அமைப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உறவுகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
யோகம்
யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். செல்வாக்குகள் கூடும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவீர்கள். வெளியிடத்தில் வாக்குகளைக் காப்பாற்றுவீர்கள். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.
ஆடை ஆபரண சேர்க்கை
விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தேவையில்லாதவற்றை யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பது நன்மை பயக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, தங்க நகை சேர்க்கும் யோகம் உண்டு. அருமையான காலகட்டமாக இருக்கும். குரு, சுக்கிரனுக்கு சந்திரன் பார்வை உள்ளதால் இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.
ஆரோக்கியம்
4 ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் சரியில்லாமல் இருப்பதால் வீட்டில் சிறிதளவு நிம்மதி இருக்காது. தாயின் உடல்நிலையில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. மார்பகம்,நெஞ்சகம் சார்ந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது. நிறைய ஆதரவுகள், புதிய விஷயங்கள் நன்றாக நடக்கும். தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு.
வழிபாடு
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்தவித டென்ஷனும் இல்லாமல் உங்கள் வேலையை நீங்கள் செய்து முடிப்பீர்கள். டென்ஷனாக இருக்கக்கூடிய விஷயங்கள் முடியும். மன நிம்மதி, நம்பிக்கை, தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சிக்கு எந்தவித குறைவும் இருக்காது. ஸ்ரீராமர் வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications