Dhanusu Rasi Palan: தடைகளை தகர்த்தெறியும் தனுசு ராசி.. எல்லா விஷயங்களிலும் ஏறுமுகம்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் (Dhansu Rasi Palan).
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்து விஷயத்திலும் அபிவிருத்தி ஏற்படும்.
தடைகள் நீங்கும்
பெரிய அளவில் சந்தோஷம் ஏற்படும். பெருமாள் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதமான ஏற்றத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
கஷ்டங்கள் தீரும்
தொழிலில் இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டம். புதிய முயற்சிகளில் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகளவிலான ஏற்றங்கள் காணப்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் தீரும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
புதிய வேலை கிடைக்கும்
நீண்டநாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நன்மையைத் தரும். திட்டமிட்டு செய்தாலே எல்லா காரியங்கள் எல்லாம் மாறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய ஏற்றம் உண்டாகும். நிறைய விதமான மாற்றங்கள் உண்டாகும்.
பணவரவு உண்டாகும்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் பொறுமையாகச் செல்வது அவசியம். ஸ்ரீராமச்சந்திரர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications