Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Dhanusu Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு, விநாயகர் வழிபாடு தடைகளை தவிடு பொடியாக்கும். ஞாயிற்றுக்கிழமகைளில் பசு மாடுகளுக்கு உணவு தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். படபடப்பை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள் என்பது போன்று எண்ணுவதைத் தவிர்ப்பது நல்லது.
அர்த்தாஷ்டம சனி
அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். செல்வாக்கு, சொல்வாக்கு ஏற்றத்தைத் தரும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த தடைகள் தவிடுபொடியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். புதிய முற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
சிக்கல் நீங்கும்
எல்லா விதமான சிக்கல்களும் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பெரிய அளவுக்கு நம்பிக்கை ஏற்படும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
வீடு வாங்கும் யோகம்
லாபங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். கட்சிப் பதவிகள் வந்து சேரும். பதவி உயர்வுகள் கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். சண்டை போட்டு காரியத்தை முடிக்கும் யோகம் உண்டாகும். கால் முட்டி, பாதம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். அண்ணன், தம்பி அந்நியோன்யமாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டம்.
வழிபாடு
அற்புதமான முன்னேற்றம், மாற்றம் ஏற்படும். தைரியமாக எல்லா விஷயத்தையும் முடிப்பீர்கள். எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. ருத்ரன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தொட்டது துலங்கும் நல்ல காலகட்டம்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications