லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. பணம், வீடு, நிலம்னு அதிர்ஷ்டம் கொட்டும்.. ஆனா இதில் மட்டும் கவனம்
Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அமோகமான காலகட்டமாக இருக்கும். ஒன்று, நான்காம் இடத்துக்கு உண்டானவர் ஏழாம் இடத்துக்கு குரு வருவதால் வீடு, மனை, தோட்டம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவது, மனைவி, கணவர் பெயரில் சொத்துகள் வாங்குவது, கூட்டாளிகள் என எல்லா விஷயங்களுமே அற்புதத்தை தரக்கூடியதாக இருக்கும்.
வெற்றி
எடுத்த காரியங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெற்றியைக் கொடுக்கும். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் உறவுகளிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதை செய்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக வைத்துக் கொள்வது நல்லது. செல்போனில் பேசும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பண விஷயத்தில் எச்சரிக்கை
பணம் சார்ந்த விஷயங்களைப் பேசும்போது கவனம் தேவை. அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங் சம்பந்தமான விஷயத்தில் கவனம், தந்தையின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குலதெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செல்வது நல்லது. பிரசித்தி பெற்ற இடங்களுக்குச் செல்வதற்கான யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
எதில் கவனம் தேவை
வேலைவாய்ப்பு முன்பைவிட வலிமையாக அமையும். எழுத்துப் பணியில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறிய சிறிய தவறுகளைச் செய்வதற்கான வாய்ப்பு உண்டு. நிறுவனத்தின் ரகசியங்களை பாதுகாப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். பார்ட்னர்ஷிப் அருமையாக அமையக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
மாணவர்கள்
தனுசு ராசி மாணவர்கள் ஆர்வமாகப் படித்தால் உயர்கல்வியில் பெரிய புகழ், அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. விளையாட்டுகளில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவிக்கும் காலகட்டமாக இருக்கும். ஜிம் செல்பவர்களுக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். பத்திரிகையாளர்களுக்கு சூப்பராக இருக்கும் காலகட்டம். பிரபலமாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம்
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குருப்பெயர்ச்சியில் அபரிமிதமான அற்புதப் பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். தம்பி, தங்கையின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம்
பிள்ளையார் வழிபாடு உங்களுக்கு வரும் ஆபத்துகளையும், சவால்களில் இருந்தும் காப்பாற்றும். அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு, வலம் வந்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications