September Matha Palan: அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர்.. தனுசு ராசிக்கு அரசுப்பணி யோகம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
தனுசு
தனுசு ராசிக்கு இந்த மாதம் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சூரிய பகவான் அமர்ந்துள்ளார். இதனால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இதுநாள் வரை இருந்த தடைகள் நிவர்த்தியாகும். தடைபட்ட பலன்கள் ஒவ்வொன்றாக நடக்கும்.
நற்பலன்கள்
உத்யோகத்தில் உங்கள் உயரதிகாரியின் நம்பிக்கை, பாராட்டை பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பெற்றோர், பெரியோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நற்பலன்கள் கிடைக்கும்.
அடுத்தக்கட்டம்
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். சொந்த வீடு கனவு நனவாகும். சொந்த வீடு, நிலம் வாங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. குரு பார்வை நேரடியாக இருப்பதால் பெரியளவுக்கு பிரச்சனைகள் வராது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். உத்யோகம், தொழிலில் அடுத்தக்கட்டத்திற்கு செல்வீர்கள்.
அதிர்ஷ்டம்
உத்யோகத்தில் உங்களின் புத்திசாலித்தனம் நன்கு வெளிப்படும். அரசுப் பணிக்கு முயற்சி செய்வோருக்கு அரசு உத்யோகம் கிடைக்கும். அரசு நிறுவனத்தில் மருத்துவ சீட் உள்ளிட்ட ஒதுக்கீடு கிடைக்கும். எதிர்பார்த்த விஷயங்களுடன் எதிர்பாராத விஷயங்களும் நிறைவேறும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் உண்டு. பொருளாதாரம் சீராக இருக்கும்.
கவனம்
பணிச்சுமை அதிகமாக இருக்கும். அது அவ்வபோது பதற்றத்தையும் ஏற்படுத்தும். மருத்துவம், ஐ.டி, வெளிநாடுகளில் இருக்கும் தனுசு ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டும். போட்டி, பொறாமையால் சில சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். காதல் உறவிலும் கருத்து வேறுபாடு தலை தூக்கும்.
பரிகாரம்
அத்தை, மாமா உறவுகளுடன் மனக்கசப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அரசு தொடர்புடைய விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறுநீரக கல், மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ராகு பகவான் சார்ந்த வழிபாடு நற்பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications