Rasi Palan This Week: தனுசு ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. குரு சுக்கிரனால் தொட்ட காரியங்களில் வெற்றி
வார ராசி பலன்: ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு உள்ளுணர்வுகள் நன்றாக வேலை செய்யும் காலகட்டமாக இருக்கும். என்னென்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறியும் தன்மை உண்டாகும். வேலையில் சிறிது அழுத்தம், சுமை ஏற்படும். மன அழுத்தம், டென்சன் ஏற்படும். அடிவயிறு, நெஞ்சுப் பகுதிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தடைகள் நீங்கும்
குரு, சுக்கிரனின் பார்வை இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்த விதமான தடைகள் வந்தாலும் அதனை தகத்தெறிவீர்கள். என்ன பிரச்சனை வந்தாலும் உங்களுக்காக பரிந்து பேசுவதற்காக 4 பேர் எப்போதுமே இருப்பார்கள். எந்த விஷயத்தை திட்டமிட்டாலும் அது அற்புதமாக நடக்கும் நல்ல காலகட்டம். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் காலகட்டமாக இருக்கும்.
நல்ல விஷயங்கள் நடக்கும்
தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். மனதில் இருந்த பாரங்கள் குறையும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறக்கூடிய அமைப்பு உண்டு. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
பாதிப்புகள் நீங்கும்
அக்கம்பக்கத்தினர், அண்டை அயலார் வீட்டில் கோபதாபமில்லாமல் இருப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் நீங்கி பெரியளவு சந்தோஷம் கொடுக்கும். தொடர்ச்சியாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். வண்டி, வாகனங்கள், சுப காரியங்கள் தொடர்பான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். குடும்பத்தில் காணப்பட்ட மனத் தாங்கல்கள், பிரச்சனைகள் அனைத்தும் டக்கென்று தீரும்.
வழிபாடு
பைரவர் வழிபாடு யோக பலத்தையும், நம்பிக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் ஆரோக்கியத்தில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தாய், தந்தையுடன் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. அதில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. எல்லா விஷயங்களையும் தைரியமாக எதிர்கொள்ளக் கூடிய அமோகமான காலகட்டமாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும், சந்தோஷ ரீதியாகவும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். தான் தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்












Click it and Unblock the Notifications