தனுசு ராசிக்கு குடும்பத்தில் காத்திருக்கும் வில்லங்கம்.. இந்த ஒரு விஷயம் கூடவே கூடாது
வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் தனுசு ராசிக்கான பலன்களை காணலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு குடும்பத்தில் புது வரவு உண்டு. தடைபட்ட சுப காரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினருடன் வெளியில் சென்று மனம் மகிழ்வீர்கள். நிலம், வீடு, வண்டி, வாகனம் போன்ற அசையும் அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும்.
பயணங்கள்
உத்யோகம், தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் உதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
குடும்பம்
குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை வேண்டும். முக்கியமாக வாழ்க்கை துணை விவகாரத்தில் உங்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை கூறுவார்கள். அதை கண்டு கொள்ளாமல் இருப்பது முக்கியம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை நீங்களே சமாளிக்க பாருங்கள். கணவன் - மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம்
உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீடும் மற்றும் பிறர் குடும்பத்தில் உங்களின் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். உங்களுக்கு சம்பந்தமில்லாத எந்த விவகாரத்திலும் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள காளி, வாராகி, துர்கை, மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில் சென்று வழிபடுவதும், அபிராமி அந்தாதி கேட்பதும் நற்பலன்களை தரும்.












Click it and Unblock the Notifications