Rasi Palan This Week: தனுசு ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் பணம்.. தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சளி தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, வியாபாரம் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
குருவின் பார்வை சமசப்தமத்தில் உள்ளதால் எல்லா விதமான நல்ல விஷயங்களும் நடக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நடக்கும். லாபம், சந்தோஷம், அனுகூலங்கள், ஏற்றங்கள் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும் நல்ல காலகட்டம்.
கவனம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கக்கூடிய அற்புதமான அமைப்பாகும். மனதில் இருந்த சங்கடங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகத்தில் மிகவும் கவனமாக இருப்பது அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நன்மைகள் நடக்கும்
உத்தியோகத்திலும், வியாபாரத்திலும், தொழிலும் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்திலும் நிச்சயமாக பெரிய அளவிலான அனுகூலத்தைப் பெறக்கூடிய அருமையான கிரக அமைப்புகள் உள்ளன.
தடைகள் நீங்கும்
தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டு. தொழில் ரீதியான சிந்தனைகள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உள்ளது. பொருளாதாராத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். அம்பாள் வழிபாட்டை மனதார செய்வது சகல விதத்திலும் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்றமும், வளர்ச்சியும் நிறைந்த வாரமாக உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications