Rasi Palan This Week: அப்படி போடு.. தனுசு ராசியினர் வாழ்க்கையில் நிகழ போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Dhanusu Lucky zodiac signs

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் அற்புதமான ஏற்றம் காணப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்யோகம், தொழில், கல்வியில் இதுநாள் வரை இருந்த தடைகள் விலகும். நினைத்தபடியான உயர்கல்வி அமையும்.

லாபம்

தொழிலில் உயர்வு இருக்கும். பங்குச்சந்தை, நிலம் சார்ந்த முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் அமைப்புகள் மாறுவதால் இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

வெற்றி

உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைகிறது. சமூகத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். ரத்த பந்த உறவுகளிடம் இருந்த மன சஞ்சலங்கள் நீங்கும்.

ஆன்மிகம்

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட புண்ணிய தலங்களுக்கு செல்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகி, அடுத்தடுத்து நல்ல செய்தி கிடைக்கும். தாய், தந்தை வழி உறவுகளால் அதிக ஆதாயம் பெறுவீர்கள். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனை நீங்குவதற்கான வாய்ப்புள்ளது.

சொத்து

சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திடீர் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும்.

தன்னம்பிக்கை

மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் உங்களின் திறமையால் அதை எளிதாக சமாளிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் மோதல் குறைந்து அந்நியோநியம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். உத்யோகம், தொழில், சமூகத்தில் உங்களின் செல்வாக்கு பல மடங்கு உயரும். உங்கள் வீட்டு அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது கூடுதல் நன்மையை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+