Diwali Rasi Palan: குருவின் அருளால் 3 யோகங்களைப் பெறும் மீனம் ராசி.. சொத்துக்களை குவிக்கப் போறீங்க
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மீனம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் மீனம் ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக இருக்கும். உலகத்தில் இருக்கும் நவக்கிரகங்களில் சந்திரன் தான் ராஜாவாக்கி அழகு பார்ப்பார் என்கிறது ஜோதிடம். உங்கள் ராசிநாதன் குரு 5 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். 1, 10க்கு உடையவரும் குரு பகவானே. தொழிலுக்கு அதிபதி உச்சம் பெறுவதால் தொழிலில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலில் வளர்ச்சி
யோக ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் யோகங்கள் பெருகும். தொழில்கள் பல வழிகளில் வளர்ச்சி பெறும். புதிய புதிய தொழில்களைச் செய்வீர்கள். உங்களுடைய லட்சியத்தின் இலக்கை தீபாவளிக்குப் பிறகு அடைவீர்கள். எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் பிரம்மாண்ட யோகம் பெறுவீர்கள். நல்ல சம்பாத்தியம், வருமானம் உண்டாகும்.
குழந்தை பாக்கியம்
5 ஆம் இடத்தில் குரு உச்சம் பெறும்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். 3, 8க்கு உரிய சுக்கிரன் ஆட்சி பெறுவதால் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தனாதிபதியும், பாக்கியாதிபதியுமான செவ்வாய் 9 ஆம் இடத்தில் ஆட்சி பெறுகிறார். அந்த செவ்வாயை குரு பார்ப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகும். நிலம், வீடு, பூமி லாபம் போன்றவை உண்டாகும். ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கும் யோகம் ஏற்படும்.
யோகங்கள்
மிக சிறப்பான பலன்களைப் பெறும் காலகட்டமாக இருக்கும். சந்திரனுடைய வீட்டில் குரு இருப்பதால் குரு சந்திர யோகமும், குரு பகவான் செவ்வாய் பார்ப்பதால் குருமங்கள யோகமும் உண்டாகும். அதே நேரத்தில் குரு பகவான் உங்களுடைய உடலை பார்ப்பதால் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
வாழ்க்கையில் தைரியமும், புத்துணர்ச்சியும் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications