காதலிப்பவரையே திருமணம் செய்யும் அதிர்ஷ்ட ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா

Subscribe to Oneindia Tamil

Valentines day 2025: காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளும் ராசியினர், காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ராசியினர் யார், அவர்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கம் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. ஜாதி, மதம், அந்தஸ்து என எந்த ஒரு விஷயத்தையும் பாராமல் மனதை மட்டுமே பார்த்து இணையும் பந்தமாகும். காதலிப்பது, காதலை சொல்வதே மிகவும் சவாலான காரியம்தான். அதிலும் அதை திருமணம் வரை கொண்டு செல்லும் பாக்கியம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஜோதிட சாஸ்திரப்படி 4 ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

lucky zodiac signs

நம் மனதுக்குப் பிடித்த நபருடன் வாழ்நாளின் கடைசி நாள் வரை கழிக்க விரும்புகிறோம். சிலருக்கு காதல் கைகூடும். சிலருக்கு அதற்கான சூழல் உருவாகாமலே போய்விடும். ஆனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு காதல் திருமணம் நிச்சயம் கைகூடும் என்று கூறப்படுகிறது. சிலரின் ஜாதகத்திலேயே அவர்களுக்கு காதல் திருமணத்துக்கான ஸ்டிராங்கான வாய்ப்புகள் இருக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசியினருக்கு ஜாதகத்திலேயே காதல் திருமணத்துக்கான யோகம் இருக்கும். அவர்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார 4 ராசிக்காரர்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக காதல் திருமணத்தையே விரும்புவார்கள். தான் விரும்பும் நபருக்காக போராடி திருமணம் செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வார்கள். அவர்களுக்கு காதல் திருமணம் செய்வதற்கான யோகமும் உண்டு. காதல், திருமணம் என மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும். அவர்களுடைய திருமண வாழ்க்கையும் இனிமையானதாக இருக்கும். தங்களுடைய இணையை மிகவும் பொறுப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்: காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ராசிகளின் பட்டியலில் இருப்பவர்கள் ரிஷப ராசியினர். இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாகவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடைய இயல்பால் இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்ளவே விரும்புவார்கள். தங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்ளும் நபர்களை மட்டுமே காதலித்து திருமணம் செய்வார்கள், திருமண வாழ்க்கையும் சரி, காதல் வாழ்க்கையும் சரி மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

மிதுனம்: காதலித்தவரையே கரம் பிடிக்கும் யோக ராசிக்காரர்களில் மிதுன ராசிக்காரர்களும் ஒருவர். எப்போதுமே காதல் மோடிலேயே இருப்பவர்கள் மிதுன ராசியினர் என்று சொல்லலாம். இவர்கள் திருமணம் செய்யும் நபர் மீதும் எப்போதும் காதலுடனும், அன்புடனுமே இருப்பார்கள். இதனால், மிதுன ராசியினர் பெரும்பாலும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார்கள். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கையில் மிகுந்த உண்மையுடனும், முக்கியத்துவம் கொடுக்கும் நபராகவும் இருப்பார்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நபர்களில் இவர்களும் ஒருவர். பொதுவாக தனுசு ராசியினர் இயல்பிலேயே கலகக்காரர்கள். தங்களுக்கென்று விதிமுறையை வகுத்து அதன்படி வாழக்கூடியவர்கள். எனவே அவர்கள் காதல் திருமணங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். தங்களைப் போன்ற நபர்களையே பெரிதும் விரும்புவார்கள். எவ்வளவு விரைவில் காதல் கைகூடுகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவர்களையே திருமணமும் செய்து கொள்வார்கள். காதலுக்கும், மகிழ்ச்சிக்கும் இவர்களது வாழ்க்கையில் பஞ்சமிருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+