3 ராசிகளின் ஆட்டம் ஆரம்பம்.. புதன்பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறும் அதிர்ஷ்ட ராசியினர் யார் தெரியுமா?
Budhan Peyarchi Palangal: கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ள புதன் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். எந்தெந்த ராசியினர் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய இயக்கத்தையும், ராசிகளையும் மாற்றுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சியினால் உண்டாகும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். புதன் பகவான் நேற்று சனி பகவான் ஆட்சி செய்யும் ராசியான கும்ப ராசியில் நேற்று மதியம் 12:58 மணிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். கும்ப ராசியில் புதன் மற்றும் சனியின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

புதன் கிரகத்தின் இந்த இடப்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியும் கிட்டும். அந்த வகையில், யோக பலன்களை அனுபவிக்கும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: புதனின் பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கும். புதனின் பெயர்ச்சியால் உங்களுடைய பேச்சில் இனிமையும், உறுதியும் பிறக்கும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதன் மற்றும் சனியின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான நற்பலன்களையும் அள்ளித் தரும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். விநாயகரை வழிபட்டு, விநாயகர் துதி பாடுவது அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.
ரிஷபம்: புதன் பெயர்ச்சியான ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களைத் தரும். அதிர்ஷ்ட தேவதையின் பூரண பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அமைதியான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்கும். நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கு இது அமோகமான காலமாக இருக்கும். வியாபாரம், தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்வீர்கள். அந்தப் பயணங்கள் உங்களுக்கு லாபகரமானதாகும், வெற்றிகரமானதாகவும் அமையும். விஷ்ணு பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கலுக்கு புதனின் பெயர்ச்சி அனுகூலமான கொடுக்க கூடியதாக இருக்கும். முதலீடுகள் மூலமாக லாபம் காணும் வாய்ப்புண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். பண வரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும்.
துலாம்: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான நல்ல பலன்களையும் அள்ளித் தரும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கத்தில் இருந்து உதவுவார். பிள்ளைகளால் நிதி சார்ந்த விஷயங்களில் நன்மையைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விநாயகர் மற்றும் விஷ்ணு வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.
விருச்சிகம்: புதனின் இடப்பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். திட்டமிட்டு இலக்கை செயல்படுத்தினால் வெற்றி காண்பீர்கள். இந்த காலத்தை பயனுள்ளதாகவும், நல்ல திட்டங்களை உருவாக்கும் பயன்படுத்துவீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு செல்லும் நேரமாக இருக்கும்.
தனுசு: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆன்மிகம், தெய்வம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சிக்கான நேரமாக இருக்கும். உங்களுடைய பேச்சாற்றல், தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் பதவி உயர்வு மூலமாக ஆதாயங்களைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் நேரமாக இருக்கும்,.
கும்பம்: புதனின் பெயர்ச்சி கும்ப ராசியில் தான் நடக்கிறது. இதனால், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரும். கும்ப ராசியில் புதனின் சஞ்சாரம் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும். மன திருப்தி அடைவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் சிறந்த லாபத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications