அதெல்லாம் சரி.. எந்த ராசிக்கு கோடீஸ்வரர் ஆகும் அதிர்ஷ்டம் இருக்கு தெரியுமா? இந்த 3 ராசிக்கு வாய்ப்பு
சென்னை: பொதுவாக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்களின் பிறந்த நேரம், இடத்தை பொறுத்து மாறும். உங்களின் பிறந்த நேரம், இடம் இதெல்லாம்தான் உங்களின் ராசியை, ஜாதகத்தை நிரூபிக்கும். உங்களின் ஜாதகத்தை பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அமையும். ஜாதகத்தில் குரு, சனி, ராகு, கேது போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள்.. எந்த திசையில் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தே உங்களின் வாழ்க்கை மாறும்.
நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்களா இல்லையா என்பதும் கூட உங்கள் ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியும். ஆனால் பொதுவாக சில ராசி உள்ளவர்கள் எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் எந்த ராசியினர் எளிதாக கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.

ஆனால் இது பொதுவாக ராசியை வைத்து சொல்லப்படும் பலன்தான். உங்களுக்கு இந்த ராசி இருந்தாலும் ஜாதகம், திசை இதை வைத்து பலன்கள் மாறலாம். சில சமயங்களில் நீங்கள் வறுமையில் கூட இருக்கலாம். பொதுவாக ராசி ரீதியாக யாருக்கெல்லாம் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
கன்னி: பொதுவாக கன்னி ராசியினர் அவர்களின் 30 வயது வரை கஷ்டத்தில் இருப்பார்கள். பொதுவாக இவர்கள் நிறைய கடனை அடைக்க வேண்டி இருக்கும். 30 வயது வரை உங்களின் கடன், பெற்றோரின் கடன், உங்கள் உறவினர்கள் கடன் எல்லாம் அடைக்க வேண்டும்.
அதன்பின் கல்விக்கு செலவு, வீட்டிற்கு செலவு என்று நிறைய கடன்கள் இருக்கும். ஆனால் அதன்பின் உங்களின் கடன்கள் குறைந்து திடீரென பணம் வரும். திடீரென உங்களுக்கு கஷ்டங்கள் குறைந்து பணம் தேடி வரும். முக்கியமாக கன்னி ராசியில் பிஸ்னஸ் செய்பவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகும் வாய்ப்புகள் அதிகம். இணைய துறையில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கும்பம்: கும்ப ராசி இளம் வயதில் நிறைய தவறுகளை செய்து இருப்பார்கள். வேலை ரீதியாக நிறைய தவறான முடிவுகளை எடுத்து இருப்பார்கள். முக்கியமாக 35- 40 வயது வரை கடுமையான மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்களுக்கு பணம் கையில் தேங்காது.
ஆனால் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பணம். உறவினர்கள் உதவி செய்வார்கள். பொருளாதாரம் சட்டென உயரும். உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்க வேண்டாம். உங்களின் 40 வயதில் பொருளாதார ரீதியாக ஜாக்பாட் அடிக்கும். நீங்கள் பைனான்ஸ் துறையில் இருந்தால் நிறைய பணம் வரும். முதலீடுகளை சரியாக செய்தால் கண்டிப்பாக நீங்கள் கோடீஸ்வரர் ஆகும் காலம் தூரத்தில் இல்லை.
மீன ராசி: உங்களுக்கு வாழ்க்கையின் ஒரு பாதி கஷ்டத்தில் இருக்கும். ஆனால் உங்கள் கஷ்டங்களை எல்லாம் நீங்கள் சரி செய்ய வேண்டி இருக்காது. மற்றவர்கள் உங்களுக்காக பிரச்சனைகளை சரி செய்வார்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கையில் பணம் கொட்டும்.
கல்வி நிறுவனங்களை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. கல்வி நிறுவன ரீதியாக நீங்கள் அதிபதியாகும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் உங்களுக்கு மாடலிங் , விளம்பர துறையில் பல கோடி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. சோம்பலை விட்டு பணியில் இறங்கினால் நீங்கள்தான் ராஜா/ ராணி!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications