அதிர்ஷ்டத்தை கொட்டும் செவ்வாய்.. வீடு, பதவி, சம்பள உயர்வு பெறும் 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
சென்னை: மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய் பகவான் பல்வேறு ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளார். இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரப் போகிறார். எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்..
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுவார்கள். நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். வீரம், வலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கைக்கு காரணகர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான்.

செவ்வாய் கிரகத்தின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்பது கிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வரும் நிலையில், ஜனவரி மாதத்தில் செவ்வாய் தனது இடத்தை மாற்றப் போகிறது. ஜனவரி 21 ஆம் தேதின்று செவ்வாய் பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யப் போகிறார்.
வக்கிர நிலையில் மிதுன ராசிக்கு செவ்வாய் பகவன் செல்வதால் பல ராசிகளுக்கு எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுபயோக பலன்களையும் அள்ளித் தரப் போகிறது. அந்த வகையில், செவ்வாயின் இடமாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோக பலன்களைத் தரப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷப ராசி: ரிஷப ராசியின் பன்னிரெண்டாவது வீட்டில் பண ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கவுள்ளார். இதனால், ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த நன்மைகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம், தொழிலில் சிக்கிய பணங்கள் உங்களிடம் வந்து சேரும். தொட்ட காரியங்கள் துலங்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடன் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பணம் வர வேண்டிய இடங்களில் இருந்து வந்து சேரும். பொருளாதாரத்தில் வலிமையைப் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். வரன் அமையாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கன்னி ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்கப் போகிறது. வேலை, வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் யோகத்தைப் பெறுவீர்கள். திருமணமாகதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். காதல் வாழ்க்கையில் சந்தித்து வந்த அனைத்து பிரதச்னைகளும் சரியாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். திடீர் பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.
துலாம் ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் துலாம் ராசிக்காரர்களக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகிறது. இதுவரை பட்டு வந்த அனைத்து நெருக்கடியில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கையில் எதிர்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். சிறப்பான நல்ல பலன்களை அடைவீர்கள்.
வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பயணங்கள் உங்களுக்கு நல்ல ஆதாயங்களைத் தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications