கஜகேசரி யோகத்தால் தொழிலில் வெற்றி, லாபம்.. 3 ராசியினருக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Gajakesari yogam: பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வேலையில் வெற்றி, லாபம், முன்னேற்றம் போன்ற அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். சந்திரனும் குரு பகவானுடன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு செய்யும் செயலில் வெற்றி மற்றும் முன்னேற்றம் உண்டாகும்.

gajakesari yoga rasi palan

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி மற்றும் கஜகேசரி யோகத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். இழுபறியில் இருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாரத்தின் தொடக்கத்தில் பிள்ளைகள் மூலம் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய இலக்குகளையும், விரும்பிய உயரத்தையும் அடைவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு, சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். உங்களுடைய பயணங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் முதல் பாதியில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு வருமானம் தொடர்பான முயற்சிகளில் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். காதல் உறவு இனிமையானதாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் அன்பு பெருகும்.

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அமைதியான சூழல் ஏற்படும். உங்களுடைய நட்பு காதலாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. திருமண வரன்கள் உங்களைத் தேடி வரும்.

பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரம், தொழில், வணிகம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். சொந்த தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரும் வாரமாக முதல் வாரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள், கல்வி, தொழில், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவுகள், நண்பர்களுடன் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை, வியாபாரம், தொழில் சார்ந்த பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். இலக்குகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் துணையின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். புதிய ஆற்றல், முன்னேற்றம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+