புதனின் மாற்றத்தால் பணமூட்டையை அள்ளப் போகும் ராசிகள்?.. உங்க ராசி இருக்கானு பாருங்க
புதன் பெயர்ச்சி: புதன் பகவான் ஜனவரி மாதத்தில் இரண்டாவது முறையாகப் பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன விதமான பலனை அனுபவிக்கப் போகிறார்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்..
ஒவ்வொரு கிரகங்களுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்ளும். புதன் பகவானும் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாகும். நவக்கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். அந்த வகையில், ஜனவரி 4 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து புதன் பெயர்ச்சியாகிறார். மீண்டும் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசியில் புதன் பகவான் பெயர்ச்சியாகிறார்.

புதன் பகவானின் இந்த இடப்பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்று பார்க்கலாம்.
மேஷம்: புதன் பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழுமையான நற்பலன்களும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். முதலீடு மற்றும் சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி சார்ந்த நன்மைகளைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாடு, ஆன்மிக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
மிதுனம்: புதனின் பெயர்ச்சி மாற்றம் மிதுன ராசிக்கு நற்பலன்களைத் தரும். முதலீடுகள், சேமிப்புகளால் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஊழியர்களின் ஆதரவால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாடு, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அதிர்ஷ்டம் வரும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தந்தையின் பயணத்தால் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்: புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கும். வியாபாரம், பங்குச் சந்தை தொடர்பான விஷயங்களில் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைவீர்கள். முதலீடு, சேமிப்பில் ஆதாயத்தைக் காண்பீர்கள்.
கன்னி: கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான தருணங்களை செலவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் பிறக்கும். உடல்நலனில் முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள்.
துலாம்: வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். கடின உழைப்பால் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். பேச்சாற்றல் மூலம் உங்களுடைய எதிரிகளை சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திடீர் பண வரவுகள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மகரம்: புதனின் வக்ரப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திட்டங்கள் அனைத்தையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செய்வீர்கள். அதன் மூலம் லாபத்தையும் காண்பீர்கள். வருமானம் பெருகும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். வருமானத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ஆதாரங்கள் கிடைக்கும்.
கும்பம்: புதனின் வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த அனைத்து விதமான வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்ப உறவுகளிடையே உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.












Click it and Unblock the Notifications