30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
சென்னை: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, சுக்கிரன் மீன ராசியில் சேர்க்கையாகப் போகின்றன. இந்த சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்கிறது வேதசாஸ்திரம். இவ்வாறு கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்போது அனைத்து ராசிகளுமே அதன் தாக்கத்தை அனுபவிக்கும். அதில் சில நல்ல பலன்களும் கிடைக்கும். சில அசுப பலன்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மீனத்தில் சூரியன், சனி, சுக்கிரன் சேர்க்கை உருவாகப் போகிறது. இந்த சேர்க்கையானது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. ஜோதிடத்தில் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படும் இந்த சேர்க்கையால் திரிகிரஹி ராஜயோகம் உருவாகிறது. இந்த திரிகிரஹி ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகப் போகிறது.
அந்த வகையில், திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்தும், என்னவிதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இங்கு விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் சனி சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம் கடக ராசியினருக்கு நல்ல பல பலன்களை அள்ளித் தரப்போகிறது. கடக ராசியினர் அபரிமிதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். வேலை, வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வால் உங்களுடைய வாழ்க்கை தரம் மேம்படும். வருமானத்திற்கான புதிய ஆதாயங்கள் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிமையாக நடக்கும். பணத்தை சேமிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள்.
தனுசு: திரிகிரஹி யோகத்தால் தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த ராஜயோகம் உங்களுக்கு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உங்களுடைய ராசியின் நான்காவது வீட்டில் இந்த இமைப்பு உருவாகப் போவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் உண்டாகும் நன்மைகள் முன்பை விட மிகவும் சிறப்பானதாக கிடைக்கும். உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். பணம் பெருகும். வருவாய்க்கார ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் பலமடங்கு லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
மீனம்: சூரியன் சனி சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகத்தால் பணம் கொட்டும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். பெரிய தொகைகள் உங்களை வந்து சேரும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். கூட்டு முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். புதிய பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். அதன் மூலம் நல்ல ஆதாயத்தையும் காண்பீர்கள். திருமண வாழக்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications