Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஷ ராசியில் ராகு உடன் இணையப்போகும் குரு பகவான்..குருசண்டாள யோகம் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் தனது வீடான மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு பகவான் மேஷ ராசியில் ஏற்கனவே பயணம் செய்ய கூடவே குரு இணையப்போகிறார். குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். மேஷ ராசியில் பயணிக்கப்போகும் குரு பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும்.

குரு ராகு இணையும் போதுதான் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. குரு-கேது இரண்டுமே சாத்வீக கிரகங்கள், ஆகையால் இவர்கள் இணைவு மற்றும் பார்வை, இயற்கையாகவே இந்த யோகத்தை தருகின்றது. தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன.

குரு பார்வை கோடி நன்மை

குரு பார்வை கோடி நன்மை


குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.

குரு சண்டாள யோகம்

குரு சண்டாள யோகம்

குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

குரு ராகு கூட்டணி என்ன செய்யும்

குரு ராகு கூட்டணி என்ன செய்யும்

ராகுவுடன் சேரும் குரு இணையும் தூரத்தையும், ராசியையும் பொருத்து தன் வலிமையை ராகுவிடம் பறி கொடுப்பார் என்பதால் குருவிற்கு ராகு ஆகாதவர். ராகு உடன் கூட்டணி சேரு குரு ராகுவிற்கு வலிமை கொடுப்பதால் குரு சண்டாள யோகம் என்று சொல்லப் படுகிறது. இந்த கூட்டணி இருக்கும் இடத்தைப் பொருத்து அந்த பாவகம் பாதிக்கப்படும். பிறந்த ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் குரு ராகு கூட்டணி இருந்தால் நிதி நிலை பற்றாக்குறை ஏற்படும்.

வாகன யோகம்

வாகன யோகம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு ராகு கூட்டணி இருந்தால் அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்படும். ராகு இருக்கும் இடத்தைப் பொருத்து அவரது திசையில் நன்மை செய்வார். அதேபோல வலிமையான குரு நிறைய நல்லது செய்வார். தசாபுத்தியில் ராகு திசைக்கு அடுத்தது குரு திசை வருகிறது. ராகுவும் குருவும் இணைந்திருக்கும் போது சிலருக்கு வண்டி வாகன சேர்க்கையை அள்ளிக்கொடுப்பார். பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். பணவரவிற்கு பஞ்சமிருக்காது. ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும். கடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.

திறமை வெளிப்படும்

திறமை வெளிப்படும்

மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் திறமைசாலிகளாக இருப்பார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும்.

குரு தரும் நன்மைகள்

குரு தரும் நன்மைகள்

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் மேஷ ராசியில் அமர்ந்து சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பார்வையிடுகிறார். குரு பயணிக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பலன் பெறும் என்பதால் இந்த மூன்று ராசிகளும் அற்புத யோகத்தை பெறப்போகின்றன. மிதுனம், மீனம், ஆகிய ராசிக்காரர்களும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் யோகங்களைப் பெறப்போகிறார்கள்.

குரு பகவானுக்கு பரிகாரம்

குரு பகவானுக்கு பரிகாரம்

ஜாதகத்தில் குருபகவான் வலிமை குன்றியிருந்தாலோ களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அது தடை தாமதம் எற்படும். தடைகள் விலக குரு பரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடலாம். அதே போல ஆலங்குடி குருபகவான், திட்டை குருபகவான், பாடி திருவலிதாயம் குருபகவான், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கலாம். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+