தமிழ்நாட்டிற்கு புதிய துணை முதலமைச்சர்.. அதுவும் எங்கிருந்து தெரியுமா.. பிரபல ஜோதிடர் பகீர் கணிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் குறித்த ஜோதிட கணிப்புகளும் வெளியாகி வருகிறது. பிரபல வட இந்திய ஜோதிடர் பிரஷாந்த் கினி தமிழ்நாடு அரசியல் குறித்து வெளியிட்டுள்ள கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தமுறை கூட்டணி ஆட்சி தான் என்றும், திடீர் ட்விஸ்டாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஒருவர் துணை முதலமைச்சர் ஆவார் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரபல வட இந்திய ஜோதிடர் பிரஷாந்த் கினி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிர்வாகிகள் தான் அண்ணாமலைக்கு பிரச்சனை. அங்குள்ள சில நிர்வாகிகள் அண்ணாமலை தமிழ்நாடு அரசியலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிந்துதான் அண்ணாமலை போட்டியிடவில்லை. இதனால் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விஜய் கிங் மேக்கராம்
இந்த தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மத்திய அரசு பதவியை நோக்கி நகர்வார். அண்ணாமலைக்கு 2026 ஜூலை மாதத்திற்கு பிறகு நல்ல காலம் பிறக்கும். உயர் பதவிகள் தேடி வரும். இந்த தேர்தலை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவுக்கு தான் லாபம். அதிமுகவால் பாஜகவுக்கு பயனில்லை. 2026 தமிழ்நாடு தேர்தலில் விஜய் தான் கிங் மேக்கராக இருப்பார்.
விஜய் கூட்டணி
பாஜகவுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார். முக்கியமாக தமிழ்நாட்டில் இந்தமுறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. திமுகவுக்கு எதிர்பாராத வகையில் வெளியில் இருந்து ஒரு ஆதரவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மாற்று கட்சியில் இருந்து தமிழ்நாட்டிற்கு புதிய துணை முதலமைச்சர் கிடைப்பார்" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் காட்டம்
பிரஷாந்த் கினியின் பல்வேறு கணிப்புகள் வெற்றிகரமாக நடந்திருந்தாலும், தமிழ்நாடு அரசியல் பற்றைய அவரின் கணிப்புகள் பொய்த்து போயுள்ளது. முக்கியமாக "அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவராக வருவார் என்று கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பதால் இந்தமுறையும் அவரின் கணிப்புகள் நடக்காது" என்று அவரின் பதிவுகளில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications