Kadagam: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. எச்சரிக்கையாகவும் இருங்க
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலமாகவும், நிறைய அதிர்ஷ்டங்களைப் பெறக்கூடிய காலகட்டமாகவும் இந்த பிப்ரவரி மாதம் இருக்கும். 2க்கு உடைய தனாதிபதி சூரிய பகவான் மகரத்திற்குப் போகிறார். 2க்கு உரியவர் கேந்திர பலம் பெறுகிறார். அதனால், இந்த மாதத்தில் பணவரவு நன்றாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். ஆபத்தான நேரத்தில் எல்லாம் உங்களுக்கு பணம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
பண வரவு கொட்டும்
வராமல் இருந்து வந்த பணங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும் யோகம் உண்டு. பங்குச் சந்தையில் நஷ்டத்தில் இருந்த பணங்கள் மூலம் வருமானம் வரும். தெரியாமல் முதலீடு செய்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நல்ல பார்ட்னர்களை சந்திக்கும் யோகம் உள்ளது. மனைவிக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு போன்ற யோகங்கள் ஏற்படும். சேமிப்பை நோக்கி எண்ணங்கள் போகக்கூடிய சூழல் ஏற்படும்.
குழந்தை பாக்கியம்
வேலை மீதே உங்களுடைய எண்ணங்கள் இருக்கும். 2க்கு உடையவர் 7 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களை இயந்திரத்தைப் போல மாற்றும். 5க்கு உடைய யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று மகரத்தில் இருக்கிறார். இறைவனின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக உண்டு. செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும். ஓட்டப் பந்தயத்தில் இருப்பவர்கள், பந்தயத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பயணங்களில் கவனம்
இந்த காலகட்டத்தில் சனிக்கிழமை நேர பிரயாணங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. 2க்கு உரிய சூரிய பகவான் 7 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல பார்ட்னர்கள் அமைவார்கள். இதனால், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை பட்டு வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் எல்லாம் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
கடக ராசியினருக்கு மனைவியால் யோகம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய பாரங்கள் அவர்கள் மூலமாக சிறிது குறையும் வாய்ப்பு உள்ளது. பணத்தை விரயம் செய்யாமல் இனி திட்டமிட்டு சேமிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications