Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magaram Rasi Palan: மகர ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுக்க போகுது.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

february-month-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-during-this-period

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த பிப்ரவரி மாதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஏழரை சனி முடிந்துள்ளதால் நற்பலன்களைத் தரும் நல்ல அமைப்பு உள்ளது. அனைத்து கிரகங்களும் தன ஸ்தானத்திற்குச் செல்வதால் பண மழை கொட்டக்கூடிய யோகம் உண்டாகும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள்.

பண வரவு கொட்டும்

எந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்ததோ, அந்த விஷயங்கள் எல்லாம் இனி பணத்தைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். 5க்கு உடைய சுக்கிர பகவானும், ராகு பகவானும் 2 ஆம் இடத்தில் இருக்கும்போது அபரிமிதமான கூடுதல் பண வரவு உண்டாகும். இன்டீரியர் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.

புதிய ஒப்பந்தம்

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. 5க்கு உடைய சுக்கிரனுடன் ராகு சேரும்போது பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். அதன் மூலம் அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு நன்றாக இருக்கும். பாக்கியாதிபதி தனாதிபதி வீட்டில் இருக்கிறார். இனிமேல் நிம்மதியான தூக்கம் ஏற்படும்.

தொழில்

சூரியன் உங்கள் வீட்டை விட்டு நகர்ந்து 2 ஆம் இடத்துக்குச் செல்கிறார். சோலார், எலக்ட்ரிசிட்டி, எலக்ட்ரிக்கல், அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். பிஸியாக இருக்கக்கூடிய சூழல் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும்.

கவனம்

சூரியனும், ராகுவும் சேரக்கூடாது. ஆனால், இப்போது ராகுவும், சூரியனும் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். குடும்பம், வாக்கு போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும். உங்களுடைய மேலதிகாரிகள், அரசுக்கு எதிராகப் பேசுவது, கணவரை எதிர்த்துப் பேசுவது, உத்தியோகத்தில் அதிகாரிகள் எதிர்த்துப் பேசக்கூடிய மனோபாவம் ஏற்படும். தலைமையை எதிர்க்கும் தைரியம் ஏற்படும். எனவே, இதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+