Mesham Rasi Palan: மேஷம் ராசியினருக்கு திரிகிரக யோகத்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. இதில் மட்டும் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இந்த பிப்ரவரி மாதம் இருக்கும். செவ்வாய் பகவான் மகரத்தில் உச்சம் பெற்றிருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். உச்சம் பெற்றுள்ள செவ்வாய் பகவான் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு மெதுவாக நகர்ந்து 21 ஆம் தேதியன்று 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமரப் போகிறார். 4 கிரகங்கள் லாபத்தில் நிற்கப் போகின்றன.
வெற்றி மேல் வெற்றி
எல்லா கிரகங்களும் 11 ஆம் இடத்தில் இருக்கப் போவதால் என்ன காரிங்களைச் செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. 1, 8க்கு உரிய செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளதால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். புதிய ஸ்டார்ட் அப்களை இந்த பிப்ரவரியில் ஆரம்பிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
அடுத்த நிலையை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குவீர்கள். தொழில் முனைவோராக மாறும் எண்ணங்கள் தோன்றும். உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள் மாறும். 11 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெறுகிறார். அதேபோல, 11 ஆம் இடத்தில் ராகு பகவான், செவ்வாய், புதன், சுக்கிரனும் இருக்கின்றன. சிறிது நாட்களில் சூரியனும் வரவுள்ளார்.
பண வரவு கொட்டும்
சுக்கிர பகவான் 11 இல் இருப்பதால் தன பாக்கியம் உண்டாகும். தனமும், இன்பமும் வந்து சேரும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிப்ரவரி மாத இறுதிக்குள் விசா தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விசா கிடைக்கும். புதன் பகவான் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். கடன் பிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருந்த நிலைமை எல்லாம் இனி நீங்கும். சிறிது சிறிதாக கடனை அடைத்து முடிப்பீர்கள். சிறிய சிறிய இஎம்ஐகளை கட்டி முடிப்பீர்கள். திட்டமிட்டு சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அடுத்ததாக சூரியன் லாப ஸ்தானத்தில் வருவதால் வேற லெவலில் முன்னேற்றமடையும் யோகம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். 5க்கு உரியவர் 11 ஆம் இடத்திற்கு வரும்போது திருமண யோகம், குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
திரிகிரக யோகம்
11 ஆம் இடம் சனியின் இடம். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. அனுமன் சாலிஷாவை தொடர்ந்து கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும். எந்த காரியத்தை தொட்டாலும் ஆஞ்சநேயர், ஐயப்பனை வணங்கிவிட்டுச் செய்வது நல்லது. குரு பகவான் 3 ஆம் இடத்தில் மறைந்து விபரீத ராஜயோகம் பெறுவதால், பிப்ரவரி 6 ஆம் தேதி திரிகிரக யோகம் ஏற்படுகிறது. இந்த அமைப்பு உங்களுக்கு அற்புதமான வெற்றிகள் கிடைக்கும் யோகம் உள்ளது.
மாமனார் வீட்டு ஆதரவு, புதிய நண்பர்களின் வருகை, புதிய நண்பர்கள் சந்திப்பு போன்றை ஏற்படும். புது வீடு, புது கார், குழந்தை பாக்கியம் என அனைத்து விஷயங்களும் அற்புதமாக இருக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொட்ட காரியங்களில் ஏற்றம் ஏற்படும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications