Mithunam: அதிர்ஷ்ட மழையில் நீச்சலடிக்கப் போகும் மிதுன ராசி.. தந்தை விஷயத்தில் மிக கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6க்கு உரிய செவ்வாய் 8 இல் மறைந்து விபரீத ராஜயோகத்தை கொடுத்துக் கொண்டிருந்தார். புதன் பகவான் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால், பெரும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். எல்லாமே கூடி வருவது போல இருந்தும் கைக்கு கிடைக்காமல் போயிருக்கும் காலகட்டமாக இருக்கும்.
லாபம் கொட்டும்
நிறைய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். வாய்ப்புகள் நிறைய கைவிட்டு போயிருக்கும். இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள், திட்டமிட்டு முதலீடுகளைச் செய்பவர்களுக்கு லாபம் கொட்டக்கூடிய காலம். வெப் சீரிஸ் எடுப்பது, முதலீடு செய்வது, முயற்சிகளை மேற்கொள்வது என எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். செவ்வாய் பாக்கியத்தில் உள்ளது. அங்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் என அனைத்து கிரகங்களும் இருப்பதால் உங்களுக்கு யோகங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கோபுர கலச யோகத்தைப் பெறுவீர்கள். மற்றவர்களால் அண்ணாந்து பார்க்கக்கூடிய யோகம் ஏற்படும்.
தந்தை ஆரோக்கியம் கவனம்
9 ஆம் இடத்தில் இத்தனை கிரகங்கள் இருக்கும்போது தந்தைக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. அப்பா என்கிற ஸ்தானத்துக்கு ஜென்ம எதிரி ராகு என்பதால் பாதிப்புகள் ஏற்படும். அதிர்ஷ்டத்தைக் கொடுத்தாலும் தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதயம், நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. பிப்ரவரி மாதத்தில் முதலீடுகள் அதிக பண வருமானத்தைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பொருளாதாரத்தில் ஏற்றம்
தந்தைக்கு முன்னெச்சரிக்கையாக மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது ஏற்றத்தைத் தரும். ஆறு தாண்டி பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இரவு நேரப் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது ஏற்றத்தை தரும். கேட்டவை எல்லாம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications