Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம்.. துணை விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி இருந்தாலும் நல்ல பலன்களைப் பெற்றிருப்பீர்கள். சனி வக்கிரமாக இருந்ததால் அஷ்டமசனியிலும் நல்ல பலன்களைப் பெற்றிருப்பீர்கள். இந்த பிப்ரவரி மாதத்தில் 5 கிரகங்கள் 7 ஆம் வீட்டுக்குச் செல்கின்றன. 7 ஆம் வீடு என்பது புதிய முயற்சிகள், காதல், இல்லறவாழ்க்கை, குடும்பம், வெளிநாடு ஆகியவற்றை குறிக்கிறது. அதனால் யோகம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
7 ஆம் இடத்தில் இவ்வளவு கிரகங்கள் இருப்பதால் புதிய சிந்தனைகள் இந்த மாதத்தில் வரும். நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். இதானால், வேகமாக முன்னுக்கு வரும் சூழல் ஏற்படும். பார்ட்னர்ஷிப் மேல் நம்பிக்கையே போயிருக்கும். அஷ்டமசனி இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தியிருந்தாலும் இந்த பிப்ரவரி மாதத்தில் புதிய தொழிலைத் தொடங்கும் யோகம் ஏற்படும்.
மகரத்தில் இருந்த சூரியன் மறைந்து தேவையில்லாத மனக் குழப்பங்களையும், மனம் அலைபாயும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கும். பிப்ரவரி 14 ஆம் தேதி வரையே சூரிய பகவான் மகரத்தில் மறைவு ஸ்தானத்தில் தான் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் நெஞ்சு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
முன்னேறும் யோகம்
இப்போது சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் 7 ஆம் இடத்திற்கு நகர்கிறது. 7 ஆம் இடத்தில் ராகு பகவான் காத்திருக்கிறார். அதனால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதனும், சுக்கிரனும் கும்பத்திற்குச் செல்கின்றனர். ராகு, புதன், சுக்கி ஆகிய 3 கிரகங்களும் சேர்ந்து முன்னுக்கு கொண்டு வரும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு சென்று நல்ல செய்தியோடு வரும் யோகம் உண்டாகும்.
7 ஆம் இடத்தில் ராகு பகவான் இருக்கும்போது மனைவியின் வருமானம் அதிகரிக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து முன்னேறும் யோகம் உண்டாகும். 7க்கு உடைய தனாதிபதி தொழில் காரகனோடு சேரும்போது மனைவிக்கு பதவி உயர்வு கிடைக்கும். 4க்கு உடைய செவ்வாய் பகவான் 6 ஆம் இடத்தில் உச்சம் பெற்று மறைந்துள்ளார். 7 ஆம் இடத்திற்கு செவ்வாய் வரும்போது அரசு வேலை, அரசு சார்ந்த நிறுவனங்கள், கான்டிராக்டுகள் போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
7 கிரகங்கள்
புதன், சுக்கிரன், செவ்வாய், ராகுவக்குப் பிறகு அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு சூரியனும் 7 ஆம் இடத்தில் வருவதால், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இரண்டு பேரும் பார்த்துக் கொள்வதற்கே சிரமம் ஏற்படும். சில பேரின் வீட்டில் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதால் மனைவியுடன் பேசும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
இல்லற வாழ்வில் பிரச்சனை இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. சிறிய விஷயத்துக்கு கூட பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். வெளிநாடு செல்ல பணம் கட்டுவது போன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்வது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications