பிப்ரவரி மாத ராசி பலன் 2022: கடக ராசிக்காரர்கள் கவனம்...சிம்மத்திற்கு ராஜ யோகம்
பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து கடகம், சிம்ம ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: பிப்ரவரி மாதத்தில் கடகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பணவரவு அதிகமாக வரும் என்றாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்கள் வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் . சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் தேடி வரப்போகிறது.
பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார். மகர ராசியில் உள்ள சனி, சூரியன், புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரியப்போகிறது. பிப்ரவரி 13ஆம் மகர ராசியில் உள்ள சூரியன் கும்ப ராசிக்கு சென்று குருவோடு இணையப்போகிறார்.
தனுசு ராசியில் உள்ள செவ்வாய், சுக்கிரன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சியாகி மகர ராசியில் உள்ள சனியோடு இணையப்போகிறார். இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் கடகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பொறுமையும் நிதானமும் தேவை
கடக ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, ஆறாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் ஏழாம் வீட்டில் சூரியன், சனி, புதன், எட்டாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் சனியின் பார்வை நேராக உங்கள் ராசியின் மீது விழுகிறது. எந்த ஒரு விசயத்தையும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். பொறுமையாக நிதானமாக முக்கிய முடிவுகளை எடுக்கவும். எந்த ஒரு நற்காரியங்கள் தொடர்பான முடிவுகளை யோசித்து செய்வது நல்லது. சூரியன் பார்வையால் பணவரவு வரும் என்றாலும் சுப கிரகமான சுக்கிரன் ஆறாம் வீட்டிலும் குரு எட்டாம் வீட்டில் இருப்பதால் விரைய செலவுகள் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிறதே என்று கவலைப்படுவீர்கள்.

மருத்துவ செலவுகள்
புது வண்டி வாகனம் வாங்க இது சரியான தருணம் இல்லை. வேலைக்காக தேடுபவர்களுக்கு இது சரியான மாதமல்ல. இருக்கிற வேலையை சிறப்போது செய்வதே நல்லது. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அது உங்களுக்கே சிக்கலாகி விடும். பெரிய அளவில் எதிர்பார்ப்பு வேண்டாம். சுப காரியங்களில் சில தடைகள் வரலாம். திருமண சுபகாரியங்கள் தொடர்பாக பெரிய எதிர்பார்ப்பு தேவையில்லை.
வயிறு தொடர்பான பிரச்சினைகள் ,உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம் மருத்துவ செலவுகள் வரும் கவனம். ஆன்மீக பயணம் செல்வீர்கள். மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு தடைகள் அதிகம் என்பதால் கவனத்தோடு பிப்ரவரி மாதத்தை கடந்து விடுவது நல்லது.

பொறுமை நிதானம்
சிம்ம ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு நவ கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி, சூரியன், புதன், ஏழாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாகக் கிடைக்கிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட நற்காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வேலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். அவசரப்பட வேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் வேலை விசயத்தில் அடி எடுத்து வைப்பது நல்லது.

மகிழ்ச்சியான மாதம்
ஐந்தாம் வீட்டில் இணைந்துள்ள சுக்கிரன் செவ்வாய் ராஜ யோகத்தை தரும் நிலையில் ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு சென்று குரு உடன் அமர்ந்து மற்றுமொரு ராஜயோகத்தை தரப்போகிறார். பிப்ரவரி மாத முற்பகுதியை விட மாத பிற்பகுதியில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. உறவினர்கள் சொந்தங்களின் வருகையால் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பரிசுகள் வந்து திக்கு முக்காடப்போகிறது. புது வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

பதவி யோகம் தேடி வரும்
தடைபட்டு கிடந்த காரியங்கள் மளமளவென நடைபெறும். குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தெம்பும் தைரியமும் கூடும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. புது வண்டி வாகனம் வாங்கலாம். பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் கை கூடி வந்துள்ளது. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இல்லத்தரசிகளுக்கு நினைத்த காரியம் கை கூடி வரும். வேலை செய்யும் பெண்களுக்கு தலைமைப் பதவி தேடி வரப்போகிறது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications