February month rasi palan 2022 tamil: விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம்
கேதுவின் பிடியில் உள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனியின் பிடியில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது.
சென்னை: பிப்ரவரி மாதத்தில் விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கேதுவின் பிடியில் உள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனியின் பிடியில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார். மகர ராசியில் உள்ள சனி, சூரியன், புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரியப்போகிறது. பிப்ரவரி 13ஆம் மகர ராசியில் உள்ள சூரியன் கும்ப ராசிக்கு சென்று குருவோடு இணையப்போகிறார்.
தனுசு ராசியில் உள்ள செவ்வாய், சுக்கிரன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சியாகி மகர ராசியில் உள்ள சனியோடு இணையப்போகிறார். இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. காரணம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் கேது, இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சூரியன், சனி, புதன், நான்காம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குழப்பமான மனநிலையில் யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். திருமண சுப காரியம் நடைபெறுவதில் தயக்கம் ஏற்படும். பொருள் வரவு அதிகரிக்கும். திருமணம் சுப காரியத்தடைகள் நீங்கும்.

அற்புதங்கள் நிகழும்
மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வார். சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பொருள் வரவு அதிகரிக்கும். திருமண குடும்ப வாழ்க்கையிலும் காதலும் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானால் குடும்பத்தில் கார சார விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. கோபப்பட்டு பேசி சண்டை சச்சரவை ஏற்படுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நான்காம் வீட்டில் சூரியன் குரு உடன் இணையும் போது அற்புதங்கள் நிகழும். சுப ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் புதிய பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகிறது.

சுப காரியங்கள் கைகூடும்
இந்த மாதத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். களத்திர காரகன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறப்போகிறது. புத்திர பாக்கியம் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். புதன் மூன்றாம் வீட்டில் சனியோடு இருப்பதால் குழப்பங்கள் நீங்கும். இளைய சகோதரர்களின் வீட்டில் நடைபெறும் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். மொத்தத்தில் பிப்ரவரி மாதம் மன நிறைவு உண்டாகும் மாதமாக அமைந்துள்ளது.

தனுசு
தனுசு ராசி நேயர்களே, பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் பயணம் சூரியன், சனி, புதன் சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் உங்களுக்கு முகப்பொலிவு கூடும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குரு சந்திர யோகம் கை கூடி வரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராகு கேதுக்குள் கிரகங்கள் அடங்கியுள்ளன. சர்ப்ப தோஷம் கூடியுள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரும். இலக்கை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள்.

நோய்கள் விலகும்
ராசி நாதன் குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் குரு உடன் இணைவதால் அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பல விசயங்களை வெளிப்படுத்த வேண்டாம். தர்ம கர்மாதிபதி யோகம் வரப்போகிறது. ஆசைகள் நிறைவேறப்போகிறது. திருமண சுப காரியங்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கை கூடி வரும். பெண்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் விலகும் காலமாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும் நல்ல நேரம் பிறந்து விட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications