பிப்ரவரி மாத ராசி பலன் 2024: கும்ப ராசியில் சனியோடு கிரகங்கள் கூட்டணி.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: பிப்ரவரி மாதத்தில் புது கூட்டணி உருவாகிறது. கும்ப ராசியில் சனி சூரியன் புதன் கூட்டணி சேரப்போகின்றன. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன. இந்த மாதத்தில் யாருக்கு பணவரவு அதிகரிக்கும், செலவு வரும். திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்: உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 9ஆம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. சனி 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வேலையில் சிறப்பாக இருக்கும். செவ்வாய் உச்சமடையும் காலம். ஒன்பதால் கூட்டில் செவ்வாய் உச்சமடைவதால் காதல் வாழ்க்கை சுகமானதாக இருக்கும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை மாணவர்களுக்கு அற்புத யோகம். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வெளிநாடு சென்று படிப்பதற்கான யோகம் தேடி வரப்போகிறது. சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கை துணை மூலம் சொத்து சுகம் ஏற்படும்.
மகர ராசியில் கிரகங்கள் கூட்டணி வெற்றியை தேடித்தரப்போகிறது. ஆலய தரிசனம் செய்வீர்கள் ஆன்மீக பயணம் அற்புத மாற்றங்களை தரப்போகிறது. குரு 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகனம் வாங்கலாம்.
தாராள தனவரவு உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும்.
கூட்டுத்தொழில் சிறப்படையும். பணியாளர்கள். ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தடை தாமதம் ஏற்பட்டாலும் வரும் 13ஆம் தேதி முதல் சூரியன் 10ஆம் வீட்டில் சனியோடு இணைந்து சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும்.
பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மன மகிழ்ச்சியை அளிக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் தர்ம ஸ்தானத்திலும் கர்ம ஸ்தானத்திலும் கிரகங்கள் கூட்டணியால் குதூகலமான மாதமாக அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications