பிப்ரவரி மாத பலன்: மேஷம் முதல் கன்னி வரை செல்வத்தை குவிக்கும் ராசிகள்.. கிடைக்கும் பலன் என்ன?
சென்னை: 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் அனைத்து ராசிகளுக்கும் அதன் தாக்கம் இருக்கும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை 6 ராசிகள் பெறப்போகும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆற்றல், உத்வேகம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி நிறைந்த மாதமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களை, கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்த தொடங்குவீர்கள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் அனைத்துவிதமான சவால்களையும் எதிர்கொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியாற்றும் இடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்ல பலன்களைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பாசிட்டிவான மாதமாக இருக்கும். உங்களுடைய திறனை சரியான நேரத்தில், இடத்தில் செலவிடுவதன் மூலம் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலை மற்றும் யோசனைகளால் பாராட்டைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உறவுகள் வலிமையாகும். சக ஊழியர்களுடன் இணக்கமான, நல்ல உறவை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர பொருள்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவீர்கள். நிதி சார்ந்த புதிய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். முதலீடு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, மன தைரியம் நிறைந்த மாதமாக இருக்கும். மனதில் புதிய தெளிவு பிறக்கும். புதிய ஆற்றலுடன் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வேலையிலும் சமநிலையை கடைப்பிடிப்பது நல்லது. உங்களுடைய திறனையும், ஆற்றலையும் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றிக்கான புதிய திசை உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடைய கதவைத் தட்டும் வாய்ப்புகளை முழுதாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் திருப்தியான மாதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மன நிறைவைத் தரும் காலமாக இருக்கும். பழைய வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களுடன் ஒத்துப்போவது உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறையான கண்ணோட்டத்தில் அனைத்து பிரச்னைகளையும் அணுகுவது நல்லது. செய்யும் காரியங்களில் உறுதியாக இருங்கள். மன தைரியத்தை கைவிடாமல் இருப்பது நல்லது.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தையும் அள்ளித் தரும் மாதமாக இருக்கும். எதிர்வரும் சவால்களை எளிதாக கடந்து செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவது மன மகிழ்ச்சியை தரும். உற்சாகமும், நேர்மறையும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய படைப்பாற்றலால் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பால் வெற்றியையும் பாராட்டையும் பெறுவீர்கள். பிரச்சனைகள், தகராறுகளை தவிர்ப்பது நல்லது. சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பல முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கடின உழைப்பு மன உறுதியால் அனைத்து சவால்களையும் சமாளிப்பீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செய்யும் வேலையில், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கடின உழைப்புக்கான அங்கீகாரம், அதற்கேற்ற பலன்களையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்துடன் ஆலோசித்து நிதி சார்ந்த விஷயங்களில் முடிவெடுப்பது நல்லது.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications