பிப்ரவரி மாத பலன்: அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. துலாம்-மீனம் 6 ராசியினர் பெறும் நற்பலன்கள்
சென்னை: 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் அனைத்து ராசிகளுக்கும் அதன் தாக்கம் இருக்கும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசி முதல் மீன ராசி வரை 6 ராசிகள் பெறப்போகும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக இருக்கும். இனிமையான பொழுதுகளை உங்களுடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செலவிடுவீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியில் சொல்லாமல் இருப்பீர்கள். உங்களுடைய திறன், ஆற்றல் அதிகரிக்கும். கலை, பொழுதுபோக்கு போன்றவற்றில் உங்களுடைய திறனை பயன்படுத்தலாம். வேலையில் சில பிரச்சனைகள், சவால்களை சந்திப்பதற்கான சூழ்நிலை உருவாகும். வேலயில் கவனம் செலுத்துவது நல்லது. இதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. செலவுகளைத் தவிர்தது சேமிப்பது நல்லது. முக்கியமான விஷயங்களில் எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சாதகமான பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்வீர்கள. உங்கள் மனதுக்குப் பிடித்த நபர்களுடன் நெருக்கம் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய இலக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பழைய நினைவுகளை நினைவுபடுத்தி மகிழ்வீர்கள். உடல்நலம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உள்ளுணர்வை பயன்படுத்தினால் எதிர்வரும் பிரச்சைகளையும், சவால்களையும் சமாளிப்பீர்கள். அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பாசிட்டிவான மாதமாக இருக்கும். உங்களுடைய நேர்மையான பேச்சால் உறவுகளை பலப்படுத்துவீர்கள். உங்களது ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகளை சந்திப்பீர்கள். தொழிலில் முன்னேற்றமான காலமாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுடைய மனதை மகிழ்ச்சியாக்கும். எண்ணங்களில் நம்பிக்கை வைத்து முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பீர்கள். படைப்பாற்றலால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சாதகமான காலமாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் உங்களுடைய முயற்சிகளைப் பாராட்டுவார்கள். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை, திட்டங்களில் உங்களுடைய யோசனைகளை வெளிப்படையாக கூறுவது நல்லது. யோசனைகளைப் பகிர தயங்க கூடாது. நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அனைத்துவிதமான கலவையான பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய யோசனைகளால் பாராட்டை பெறுவீர்கள். இது உங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும். உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள். அதன்படி நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. யோகா, தியானத்தில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். நிதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. முதலீடு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நற்பலன்களை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். உங்களுடைய எண்ணங்கள், உணர்வுகளை உங்களுக்கு பிடித்த நபர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். குடும்ப உறவுகள், நண்பர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். . சிறப்பான தருணங்களை அனுபவிப்பீர்கள். செய்யும் வேலைகளில் உங்களுடைய படைபபாற்றலால் வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் வேலைகளில் பொறுமை, கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய நட்புகளை ஏற்படுத்துவதற்கான காலமாக இருக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications