Kumbam: கும்ப ராசிக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த பிப்ரவரி முதல் பாதியில் அற்புதமான யோகங்களைப் பெறக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசினாலே மற்ற எல்லா விஷயங்களும் கைகொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
தொழிலில் அனுகூலம்
தொழிலில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்தடுத்து அனுகூலமான சூழ்நிலையைப் பெறக்கூடிய யோகம் உண்டு. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். வரன்கள் கைகூடும். திருமண யோகம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் வீட்டில் நடக்க ஆரம்பிக்கும். புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும்.
புதிய வாகனம் வாங்கும் யோகம்
பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் என எந்தவித மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பணவரவு
இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான எண்ணங்கள் தோன்றும். ஏற்றம் நிறைந்த காலகட்டம். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு விளக்கேற்றுவது தடைகளை தவிடு பொடியாக்கும். ஆரோக்கியத்தில் வயிறு, கழுத்து தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications