Meenam Rasi Palan: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீன ராசி.. சொத்துகள் சேர்க்கும் யோகம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு அமோகமான லாபங்கள் கிடைக்கும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதிய பொறுப்புகள், புதிய கெளரவங்கள் உண்டாகும் காலகட்டம். ஏற்றத்திற்கான காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அற்புதமான யோகம் உண்டாகும்.
சிக்கல்கள் நீங்கும்
வேற்று மொழி மனிதர்களால் நல்ல அனுகூலம், ஆதாயம் ஏற்படும். ஜென்ம சனியிலும் அரசியல், அரசுத் துறைகளில் இருப்பவர்கள் பெரும் வெற்றியையைும், சாதனையையும் பெறக்கூடிய காலகட்டம். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். செல்வாக்கு அற்புதமாக இருக்கும்.
யோகம்
ஜென்ம சனியிலும் தொழில் மாற்றங்கள் அடுத்தடுத்து கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்கள் புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
நல்ல மாற்றம்
சுப விரயங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நினைத்தது எல்லாம் நடக்கும் யோகம் உண்டு. சகல விதத்தில் ஏற்றம் ஏற்படும் காலகடடம். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது நல்லது.
குரு பார்வை
தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். குருவின் பார்வை இருப்பதால் தொழில், படிப்பு, உத்தியோகத்தில் நினைத்தது நடக்கக்கூடிய யோகம் உண்டு. ராகேவந்திரர் வழிபாடு பெரிய நம்பிக்கையையும், பலத்தையும் ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு காய்கறி போன்ற உணவுகளை தானமாகக் கொடுப்பது குடும்பத்தில் இருக்கும் தடைகளை தவிடு பொடியாக்கும்.












Click it and Unblock the Notifications